மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா தடுப்பு நடவடிக்கை: ஈரோட்டில் இன்று மீன் மார்க்கெட்டுகள் இயங்கவில்லை

ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  

News image
Updated On :28 ஜூன் 2020, 9:14 am

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  

சென்னையிலிருந்து வந்த சிலரால் தொற்று பரவ தொடங்கியதை அடுத்து  வெளிமாவட்டங்களில் இருந்து  இ-பாஸ் பெற்று வரும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.   

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் , வியாபாரிகள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது.  

மேலும் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர பொருத்தவரை ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதேபோன்று கருங்கல்பாளையம் காவிரி ரோட்டிலும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.  இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும் அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் இயங்காது என்ற உத்தரவை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட்டுகள் இயங்கவில்லை. மீன் மார்க்கெட்டுகள் பூட்டப்பட்டு இருந்தன.  கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடந்தது. இதைப்போன்று மாவட்டம் முழுவதும் மீன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.