மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஓய்வு

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற்றார்.

News image
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு
Updated On :13 அக்டோபர் 2020, 4:15 pm

DIN

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற்றார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த கே.ரவிச்சந்திரபாபு செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவுக்கு வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளி்ட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவை அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, தற்போதுள்ள இளம் வழக்குரைஞர்கள் சிறந்த முறையில் நீதிமன்றத்தில் செயல்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இளம் வழக்குரைஞர்கள் வழக்குகள் தொடர்பாக நிறைய படிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார். கடந்த 9 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற நீதிபதியாக பணயாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

ஓய்வுபெற்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவர். கடந்த 1984-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தியிடம் ஜூனியராக பணியாற்றியவர்.

நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவின் ஓய்வைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 53-ஆக குறைந்துள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.