நாமக்கல்லில் இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலனுக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி
மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலனுக்கு நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.


நாமக்கல்: மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலனுக்கு நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பங்கேற்று இராம.கோபாலன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி வளர்ச்சிக்கும், இந்து மக்களுக்காகவும் இராம.கோபாலன் பாடுபட்டது குறித்தும் அவரது நினைவுகள் பற்றியும் மாநிலத் தலைவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில செயலாளர் சி.எம். அண்ணாதுரை, நாமக்கல் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் அய்யாவு, நாமக்கல் மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...