கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஹரியாணாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

News image
கரோனா தடுப்பூசி
Updated On :24 ஏப்ரல் 2021, 10:33 am

DIN

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையில் மூத்த அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில், ஹரியாணாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். அதற்கான பதிவு ஏப்ரல் 28 முதல் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் ஹரியாணா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.