மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகளுடன் ஜன.21-இல் முதல் சந்திப்பு: உச்சநீதிமன்றக் குழு

வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் ஜனவரி 21ஆம் தேதி முதல் கட்ட சந்திப்பு நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த அனில் கன்வட் தெரிவித்துள்ளார்.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :19 ஜனவரி 2021, 9:50 am

ANI

வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் ஜனவரி 21ஆம் தேதி முதல் கட்ட சந்திப்பு நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த அனில் கன்வட் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.

அந்தக் குழுவின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு குழுவைச் சேர்ந்த அனில் கன்வட் கூறியதாவது,

விவசாயிகளுடனான முதல் சந்திப்பு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களை நேரில் சந்திக்க விரும்பும் அமைப்புகளுடன் நேரில் சந்திப்பு நடத்தப்படும். நேரில் வர முடியாத அமைப்புகளுடன் காணொலி மூலம் சந்திப்பு நடைபெறும்.

மேலும், அரசு எங்களுடன் பேச விரும்பினால், நாங்கள் அவர்களையும் வரவேற்கிறோம். அரசாங்க தரப்பின் கருத்தையும் கேட்பதற்கு தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விவசாயிகளுடன் நாளை மத்திய அரசு 10ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைவா் பூபேந்தா் சிங் மன், சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்துக்கான தெற்காசிய இயக்குநா் பிரமோத் குமாா் ஜோஷி, வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிா்ணய ஆணையத்தின் முன்னாள் தலைவா் அசோக் குலாடி, ‘ஷேத்கரி சங்காதனா’ என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அனில் கன்வட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவிலிருந்து பூபேந்தா் சிங் கடந்த வாரம் விலகியதையடுத்து தற்போது குழுவில் 3 பேர் மட்டுமே உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.