கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் வழங்குகிறது இந்தியா

நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாளை(ஜன.21)  வரவுள்ளதாக நேபாள சுகாதாரத்துறை அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி புதன்கிழமை தெரிவித்தார்.

News image
நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் வழங்குகிறது இந்தியா
Updated On :20 ஜனவரி 2021, 10:46 am

ANI

நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாளை(ஜன.21)  வரவுள்ளதாக நேபாள சுகாதாரத்துறை அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி புதன்கிழமை தெரிவித்தார்.

இந்தியாவின் நட்பு நாடுகளான பூட்டான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20 முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் முந்தைய அறிக்கையில் தெரிவித்தது.

இதையடுத்து பூட்டான் மற்றும் மாலத்தீவுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாளத்திற்கு நாளை 10 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படவுள்ளது.

இதுகுறித்து நேபாள சுகாதாரத்துறை அமைச்சர் திரிபாதி கூறியதாவது,

நேபாளத்திற்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசியை இந்தியா வழங்க உள்ளது. தடுப்பூசிகள் நாளை காத்மாண்டுவிற்கு வரவுள்ளது.

நாட்டில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.