தில்லி துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
தில்லியில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்த கடைகளுக்கு பரவி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.


தில்லியில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்த கடைகளுக்கு பரவி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
கரோனா இரண்டாம் அலை குறைந்த காரணத்தால் கடந்த வாரம் முதல் தில்லியில் உள்ள அனைத்து கடைகளும் சில விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லி லாஜ்பட் நகர் கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உள்ள கடைகளுக்கு வேகமாக பரவத் தொடங்கியது.
30 வாகனங்களில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...