கிஷோா் கே.சாமி மீது நடிகை ரோஹிணி புகார்
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோஹிணி ஆன்லைனில் புகார் தெரிவித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோஹிணி ஆன்லைனில் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோா் குறித்து அவதூறாக பல பதிவுகளை முகநூலில் பதிவிட்டதாக கிஷோர் கெ.சாமி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், கிஷோா் சாமியை ஜூன் 28 -ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி அனுபிரியா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று பெண் பத்திரிகையாளர்கள் புகார் அளித்த நிலையில், இணையதளம் மூலம் சென்னை காவல்துறையிடம் கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோஹிணி அவதூறு பரப்புவதாக இன்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், தன்னைப் பற்றியும், தனது கணவர் ரகுவரன் பற்றியும் முகநூலில் அவதூறு பரப்பியதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...