

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,098 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 2,098 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 10,96,393ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 4,435 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 2,815 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 10,66,259ஆக உள்ளது. தற்போது 25,394 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.