மேற்குவங்கம், அசாமின் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு

மேற்குவங்கம், அசாம் மாநில சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

மேற்குவங்கம், அசாம் மாநில சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது.

மேற்குவங்கம், அசாம் சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

மேற்குவங்கம்:

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில், முதல்கட்டமாக 27ஆம் தேதி 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியும், வாக்கெண்ணிக்கை மே 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

அசாம்: 

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மொத்தம் 126 தொகுதிகளை கொண்ட அசாமில், முதல்கட்டமாக 27ஆம் தேதி 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதியும், வாக்கெண்ணிக்கை மே 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த 2 மாநிலங்களுக்கான தேர்தல் பிரசாரத்தில் பாஜகவின் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், நட்டா, சிவராஜ் செளகான் மற்றும் காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. 

மேலும், இதற்கு மேல் யாரும் கருத்துக் கணிப்பு வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com