புயலால் ஆக்ஸிஜன் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அமைச்சர்

யாஸ் புயலின் தாக்கத்தால் ஆக்ஸிஜன் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

யாஸ் புயலின் தாக்கத்தால் ஆக்ஸிஜன் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. யாஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு
வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் 26ஆம் தேதி பிற்பகல் பாரதீப்-சாகர் தீவுக்கு இடையே கடக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் கூறியது,

யாஸ் புயலின் தாக்கத்தால் ஆக்ஸிஜன் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது. தொடர் மின் விநியோகம் மட்டுமே சவாலாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com