கைது செய்யப்பட்ட விஜய் பாபோர்
கைது செய்யப்பட்ட விஜய் பாபோர்

குஜராத் பர்தம்பூரில் மறுவாக்குப்பதிவு!

குஜராத் பர்தம்பூரில் பாஜக எம்.பியின் மகன் வாக்குச்சாவடியை கைப்பற்றியதால், அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நடத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்டமாக குஜராத்தில் நேற்று (மே.7) நடைபெற்றது. அதில், தாஹோத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் பாபோரின் மகன் விஜய் பாபோர், மஹிசாகர் பகுதி சந்த்ரம்பூர் தாலுகாவைச் சேர்ந்த பர்தம்பூர் கிராமத்தில் வாக்குச்சாவடியை கைப்பற்றி அதனை இன்ஸ்டாகிராம் நேரலையில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அங்கு வந்த வாக்காளர்களை வாக்களிக்க விடாததுடன் அங்குள்ள தேர்தல் அலுவலர்களை மிரட்டி அவமதித்து, போலி வாக்குப்பதிவும் செய்துள்ளார். இவை அனைத்தும் காணொளியில் பதிவாகி உள்ளது.

அந்தக் காணொளி அனைவராலும் பகிரப்படுவது தெரிந்ததும் அதனைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார் விஜய் பாபோர்.

கைது செய்யப்பட்ட விஜய் பாபோர்
வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

பாஜக உறுப்பினரின் இந்த அராஜகத்தைக் கண்டித்து, தாஹோத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தவியத், மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்டத் தேர்தல் ஆணையரிடமும் புகாரளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பர்தம்பூர் கிரமத்தின் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மே 11 அன்று மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விஜய் பாபோர், மஹன் தாமோர் ஆகியோரை இந்திய தண்டனைச் சட்டத்தின் 128, 121, 122, 131/பி, 171/டி, 135 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

‘கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் வாக்குப்பதிவு நடந்த அன்று மாலை 5.49 மணிக்கு வாக்குச்சாவடிக்குச் சென்று 5.54 க்கு கிளம்பியுள்ளனர். அந்தச் சில நிமிடங்களுக்குள் இன்ஸ்டாகிராம் நேரலையில் வாக்குபதிவு இயந்திரத்தை கையில் எடுத்தும், வேறு இரண்டு நபர்களின் வாக்குகளைத் தாமாகவே செலுத்தி போலி வாக்குப்பதிவும் செய்துள்ளனர்’ என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com