

உத்தரப் பிரதேசத்தில் லக்னௌவில் நடைபெற்ற ராணுவத் தளவாடக் கண்காட்சியில் வர்த்தக உடன்பாடுகள் கையெழுத்திடும் நிகழ்வின்போது இலகு ரக எந்திரத் துப்பாக்கியொன்றை ஏந்தியவாறு இருப்பவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அஸ்ஸாமில் கோக்ரஜாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போடோ உடன்பாடு கையெழுத்திடப்பட்டதைக் கொண்டாடும் விழாப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஜகதீஷ் முகி, முதல்வர் சர்வானந்த சோனோவால்.

தெலங்கானாவில் மேதாரத்திலுள்ள சம்மக்கா - சரளம்மா கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிழாவின்போது வழிபட்ட ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

அமெரிக்க செனட் அவையில் பதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகையில் உரையாற்றியபோது, தாம் விடுவிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் செய்தித் தாள் தலைப்பைக் காட்டுகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்த அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் மற்றும் அவருடைய மனைவியும் இத்தாலிக்கான இந்தியத் தூதருமான ரீனத் சாந்து.

பெங்களூருவில் கெம்பபுராவில் அருகே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றதால் சாய்ந்துவிட்ட ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டடம்.

செர்பியாவில் கெலிபிஜாவிலுள்ள செர்பியாவுக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான எல்லைக் கோட்டருகே நிற்கும் குழந்தைகள். ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரிக்குள் நுழைவதற்காக அந்த நாட்டுடனான செர்பிய எல்லையில் குழந்தைகள் உள்பட இரு நூறுக்கும் அதிகமானோர் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: அரங்கநாதா், வனபத்திரகாளியம்மன், மலை ரயிலால் புகழ்பெற்ற மேட்டுப்பாளையம்!

கருணாநிதி போட்டியிடாத ஒரே தேர்தல்!

மதுரை தெற்கு! எதிர்பார்ப்பில் நெசவாளர்கள்!

தொடர்ந்து 7வது ஆண்டாக ஜமா மசூதியில் தொழுகைக்குத் தடை!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

