/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 8, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :11 பிப்ரவரி 2020, 10:52 am

DIN

Story image

நாஜிகளின் லெனின்கிராட் முற்றுகையைத் தகர்த்த பின் முதன்முதலாக உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு ரயில் வந்ததை நினைவுகூரும் விதமாக, 77-வது ஆண்டு நினைவு விழாவையொட்டி, இரண்டாம் உலகப் போர்க் கால ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. பின்லியான்ட்ஸ்கி ரயில் நிலையத்தில் அந்தக் காலத்தை உணர்த்தும் ரயிலை வரவேற்கும் மக்கள்.

Story image

புணே நகரில் இந்திய வர்த்தக - தொழில்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த ஓவியம் தீட்டும் நிகழ்ச்சியொன்றில் வாயில் தூரிகையைப் பிடித்துத் தீட்டுகிறார்கள் ராணுவ மறுவாழ்வு மையத்தின் வீரர்கள். முதுகுத் தண்டில் அடிபட்டதால் உடலில் இடுப்புக்குக் கீழே செயல்பட இயலாமல் முடக்கப்பட்டவர்கள் இவர்கள்.  எனினும், இவர்களில் பலர், வாயில் தூரிகை பிடித்து ஓவியம் தீட்டக் கற்றுக் கொள்கின்றனர். உலக அளவில் வாய் மற்றும் பாதங்களால் ஓவியம் தீட்டுவோர் அமைப்பொன்றும் இருக்கிறது. இந்த அமைப்பில் இணைந்துகொள்வோருக்கு அவர்களே ஓவியங்களை விற்றுத் தருவதுடன் உதவித் தொகைகளையும் வழங்குகிறார்கள். 

Story image

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்ட வந்த குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், அவருடைய மனைவி சவீதா கோவிந்த்.

Story image

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.

Story image

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Story image

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கக் குடும்பத்தினருடன் வந்த முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த கேஜரிவால்.

Story image

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதியான போராட்டம் நடைபெற்ற ஷாகின் பாக் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியொன்றில் வரிசைகளில் நிற்கும் வாக்காளர்கள்.

Story image

புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபட்ச.

Story image

உத்தரப் பிரதேசம் வாராணசியில் தசாஸ்வமேத கட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கங்கை ஆரத்தி செய்த பூசகர்கள்.

Story image

கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியில் பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சனிக்கிழமை அலகு குத்திப் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர். 

Story image

சீனாவில் வூஹானில் கரோனா வைரஸ் பாதித்த நோயாளியொருவரை மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லும் மருத்துவப் பணியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.