/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 17, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 10:30 am

DIN

துபையில் துபை அதிசயத் தோட்டத்தில் பூக்களால் உருவாக்கப்பட்ட எமிரேட்ஸ் ஏர்பஸ் ஏ380 மாதிரி ஜெட் விமானம். ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பூக்களாலும் தாவரங்களாலும் இந்த மாதிரி விமானம் அமைக்கப்பட்டிருக்கிறது.

Story image

ஜெர்மனியில் தலைநகர் பெர்லினில் எதிர்வரும் 70-வது பெர்லின் பன்னாட்டுத் திரைப்பட விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்குவதற்காக விற்பனை கவுன்டர்கள் முன் காத்திருக்கும் - உறங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்கள்.

Story image

சீனாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் முதல் குழுவினரை வூஹானிலுள்ள ஹுஷெஷான் மருத்துவமனையின்  தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு இடம் மாற்றும் பணியில் மருத்துவப் பணியாளர்கள்.

Story image

கரோனா வைரஸ் பாதித்த சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து திரும்பிவந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தில்லியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்.   வூஹானிலிருந்து அழைத்து வரப்பட்ட 406 பேரில், கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்பட்ட பின் ஒவ்வொருவராக முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Story image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் வரவுள்ள நிலையில், குஜராத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ள அமெரிக்கப் போர் விமானம். 

Story image
Story image

மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை பராக்கா தடுப்பு அணைப் பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், மூவர் காயமுற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.