இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பர்கூர் அருகே மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி: 11 பேர் காயம்

பர்கூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:32 am

DIN


ஈரோடு: அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி, மேற்கு மலைப் பகுதியில் உள்ள தம்புரெட்டி மலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் ஞாயிற்றுக்கிழமை காலை அந்தியூர் அருகே உள்ள வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்டத்திற்கு வேலைக்காக டாடா சுமோ காரில் சென்றுள்ளனர்.  

Story image

கார் மணியாச்சிபள்ளம் என்ற இடத்தில் இறக்கத்தில் இறங்கி கொண்டிருக்கும் போது திடீரென வாகனத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக, சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளான காருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் சிறிது நேரம் அவர்களை மீட்டு வருவதில் சிறிது நேரம் தொய்வு ஏற்பட்டது.

Story image

விபத்தில், தம்புரெட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ்(45), சிக்கணன் (45), தொட்டப்பி (45), ஜோகன் (35) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,

காயமடைந்த 11 பேரில் 3 பேர் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 8 பேர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் தற்போது முதலுதவி சிகிச்சை பெற்று தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Story image

விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:  அதிக அளவில் ஆள்களை ஏற்றி வந்ததன் காரணமாகவே, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதால் வாகனத்தில் இருந்து வெளியில் வரமுடியாமல் 4 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது,

மேலும் கார் பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் அதிக அளவு உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றனர்.

விபத்து குறித்து பர்கூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், 

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.