பைடன், ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து
அமெரிக்க அதிபர்(தேர்வு) ஜோ பைடன், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர்(தேர்வு) கமலா ஹாரிஸ் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க அதிபர்(தேர்வு) ஜோ பைடன், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர்(தேர்வு) கமலா ஹாரிஸ் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட்டது. இப்பண்டிக்கைக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க தலைவர்களான அதிபர்(தேர்வு) ஜோ பைடன், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர்(தேர்வு) கமலா ஹாரிஸ் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர்(தேர்வு) ஜோ பைடன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியதாவது,
“தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் லட்சக்கணக்கான ஹிந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பெளத்தர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த ஆண்டு நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிரம்ப வாழ்த்துகிறேன்” என கூறினார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சுட்டுரை பக்கத்தில், வெள்ளை மாளிகையில் விளக்கு ஏற்றுவது போல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர்(தேர்வு) கமலா ஹாரிஸ் வெளிட்ட செய்தியில்,
“உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவோர் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும், ஆரோக்கியமுடனும் கொண்டாட வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...