ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

போக்சோ சட்டத்தின் கீழ் உ.பி. முன்னாள் அமைச்சர், மகன் கைது

முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது

News image

போக்சோ சட்டத்தின் கீழ் உ.பி. முன்னாள் அமைச்சர், மகன் கைது

Updated On :12 ஜூலை 2021, 10:10 am

DIN

லக்னௌ: உத்திர பிரதேச மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி அளித்த புகாரின் பேரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அம்பிகா சௌத்ரி மற்றும் அவரது மகன் ஆனந்த் சௌத்ரி இருவரையும் அம்மாநில காவல்துறை கைது செய்தனர்.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள்  உபேந்திர திவாரி பற்றி தரக்குறைவாகவும்,  அவதூறாகவும் பேசிய காணொலி ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், உபேந்திர திவாரியின் மகள் மற்றும் அவர்களது தாய் குறித்தும் அவதூறாகப் பேசியிருப்பதால், இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து ஆனந்த் சௌத்ரி கொலை மிரட்டல் விடுத்ததற்காக   அமைச்சர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் இந்த வழக்கில் மேலும் சிலரும் கைது செய்யப்படுவார்கள் என்பதையும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.