மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா? முதல்வர் நாளை (ஜூன் 2) ஆலோசனை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :1 ஜூன் 2021, 3:49 pm

DIN

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கரோனா தொற்று பரவலின் மத்தியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் இயங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. வகுப்புகள் நடைபெறாத நிலையில் தேர்வுகள் நடத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுமா என்கிற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நிலவி வந்தது. இதுகுறித்து பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவினை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.