வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.5.25 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை விமான நிலைய தபால் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்களில் சந்தேகம் கொண்ட விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழம அவற்றை சோதனையிட்டனர்.
அப்போது அதில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான 105 விலையுயர்ந்த போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் பார்சலில் குறிப்பிடப்பட்ட முகவரி போலியானது என்பதை உறுதி செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



