திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கேரளத்தில் 55 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

கேரளம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

News image

தேர்தல் ஆணையம்

Updated On :2 மே 2021, 8:59 am IST


கேரளம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது. கடந்த மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தல் நடைபெற்றது.  நிலையில், வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன.

இந்தப் பணியில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்தல் அலுவலா்கள் ஈடுபடுகின்றனா். 30,281 போலீஸாரும், 3,332 மத்திய படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு முதல்கட்டத் தகவல் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும், மாலை 5 மணி வாக்கில் தோ்தல் முடிவுகள் ஓரளவுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி டீகாராம் மீனா தெரிவித்தாா்.

மொத்தம் 140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தோ்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில், இந்த முறை பாஜகவும் களமிறங்கியுள்ள நிலையில், கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்பொழுது 53 இடங்களில் இடதுசாரி கூட்டணியும்,  காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களிலும். பாஜக 1 இடத்திலும் முன்னணி வகிக்கிறது. 

கேரளாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரபைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.