குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சேலத்தில் 4 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

சேலம் மாவட்டத்தில் 11  தொகுதிகளில்  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

News image
Updated On :2 மே 2021, 2:51 am

DIN


சேலம்: சேலம் மாவட்டத்தில் 11  தொகுதிகளில்  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர் மற்றும் மேட்டூர் தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. எடப்பாடி மற்றும் சங்ககிரி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சங்ககிரி தனியார் கல்லூரியிலும், சேலம் தெற்கு, வீரபாண்டி, ஏற்காடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சேலம் தனியார் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. இதேபோன்று, ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி தொகுதிகளுக்கான வாக்குகள் தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. 

நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் வாக்குச்சாவடி முகவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அடுத்த கட்டமாக 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. 

ஒவ்வொரு தொகுதிக்கும், தலா 14 மேஜைகளில் ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.இதன்படி, எடப்பாடி தொகுதியில் 29 சுற்றுக்கள் வரை வாக்கு எண்ணப்படும்.  கெங்கவல்லி தொகுதியில் 25 சுற்றும், ஆத்தூர் தொகுதியில் 25 சுற்றும், ஏற்காடு தொகுதியில் 29 சுற்றும், ஓமலூரில் 30 சுற்றும், மேட்டூரில் 29 சுற்றும், சங்ககிரியில் 28 சுற்றும், சேலம் மேற்கு தொகுதியில் 30 சுற்றும், சேலம் வடக்கு தொகுதியில் 29 சுற்றும், சேலம் தெற்கு தொகுதியில் 27 சுற்றும், வீரபாண்டி தொகுதியில் 25 சுற்றுக்கள் வரையிலும் வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி நிலவரம் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.