குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார். 

News image
பிரேமலதா விஜயகாந்த்
Updated On :2 மே 2021, 9:18 am

DIN



விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார். 

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. 

இந்த சூழலில் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 117 இடங்களிலும், அதிமுக கூட்டணி 78 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பின்னடைவைச் சந்தித்து வந்த அதிமுக அமைச்சர்கள் தற்போது முன்னிலையில் இருந்து வருகின்றனர். 

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் ஸ்டார் தொகுதியாக விளங்கும் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் 8 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம்.ஆர் ராதாகிருஷ்ணன் 25,323 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஜே.கார்த்திகேயன் 19,533 வாக்குகள் பெற்று தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார். அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 9,902 வாக்குகள் தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார். 

விருத்தாசலம் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் கட்சி 4 முறையும், அதிமுக, திமுக தலா 3 முறையும், தேமுதிக 2 முறையும், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதா தளம், பாமக, சுயேட்சை ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.