கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இடுக்கி மாவட்டத்தில் பொதுமுடக்கம் எதிரொலி:  தேனி மாவட்ட மலைச்சாலைகள் அடைப்பு 

தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் எல்லைகளில் உள்ள மலைச்சாலைகள் அடைக்கப்பட்டது.

News image
குமுளி சோதனை சாவடி 
Updated On :8 மே 2021, 7:44 am

DIN


கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் எல்லைகளில் உள்ள மலைச்சாலைகள் அடைக்கப்பட்டது.

இடுக்கி மாவட்டத்தில் பொதுமுடக்கம் சனிக்கிழமை முதல் (8.05.2021 முதல் 16.05.2021 இரவு வரை)  அமல்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக தேனி மாவட்டம் கேரளம் மாநிலம் அருகே உள்ளதால், கம்பமெட்டு, குமுளி ஆகிய மலைச்சாலைகள் அடைக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களான, காய்கனிகள், பால் போன்றவைகள் மட்டும் கம்பம்மெட்டு குமுளி வழியாக கேரளாவுக்குள் செல்கிறது.

Story image

கம்பம் மெட்டு சோதனை சாவடி

கேரளாவிலிருந்து மருத்துவ தேவைக்காக தேனி மாவட்டம் வருபவர்கள் இ பாஸ் அனுமதி பெற்று, சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்தபின் அனுமதிக்கப்படுகின்றனர், அவர்கள் செல்லும் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது.

அதேபோல் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்கள் அவருடைய வாகனங்கள், இ பாஸ் உள்ளிட்ட அனுமதி சான்றுகளை தமிழக எல்லையில் உள்ள காவல் துறை, மருத்துவ துறை, வனத்துறை அதிகாரிகள் சரி பார்த்த பின்பு கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

முழு பொதுமுடக்கம் காரணமாக தமிழக கேரள எல்லைப்பகுதிகளில்  இரு மாநில அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

லோயர் கேம்பில் இருந்து ஆட்டோ மூலமாக குமுளி செல்லும் பயணிகள் லோயர் கேம்ப் சோதனைச் சாவடியில்  தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.