வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

'தீவிரவாதியுடன் தொடர்பு' - கேஜரிவாலை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி

2017ல் தீவிரவாதி ஒருவரின் வீட்டில் அரவிந்த் கேஜரிவால் தங்கியிருந்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். 

News image

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

Updated On :16 பிப்ரவரி 2022, 10:07 am

2017ல் தீவிரவாதி ஒருவரின் வீட்டில் அரவிந்த் கேஜரிவால் தங்கியிருந்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். 

ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் பயணத்தின்போது மோகாவில் உள்ள ஒரு தீவிரவாதியின் வீட்டில் இரவு தங்கியதாக செய்திகள் வெளியாகின. அப்போது தேர்தல் நேரம் என்பதால் இது மிகவும் சர்ச்சையானது. 

இந்நிலையில் இதைக் குறிப்பிட்டு, பர்னாலாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'என்ன நடந்தாலும் நீங்கள் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து விடாதீர்கள். இதுவரை எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் ஒரு தீவிரவாதியின் வீட்டில் தங்கியதில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் ஒரு தீவிரவாதியின் வீட்டில் இருக்கும். 

பஞ்சாபிற்கு நிலையான அரசாங்கம் தேவை. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியே தொடர வேண்டும்' என்றார். 

பஞ்சாபில் ஒரே கட்டமாக பிப்ரவரி 20-ம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.