தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும்!

பணம் விரைவில் வழங்கும் உறுதிமொழி: சென்னை மெட்ரோ அறிவிப்பு

News image

கோப்புப்படம்

Updated On :2 ஏப்ரல் 2024, 3:57 am

DIN

மெட்ரோ பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தி, க்யூஆர் பயணச்சீட்டைப் பெறாதவர்களுக்கு, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோவில் ஸ்டேடிக் க்யூஆர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறும் சேவையில் 31.03.2024 அன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 01.04.2024 அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தடை ஏற்பட்டது.

மெட்ரோ பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தி, க்யூஆர் பயணச்சீட்டைப் பெறாதவர்களுக்கு, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை ஏற்கனவே மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை பணத்தைத் திரும்பப் பெறாதவர்களுக்கு 2 நாள்களில் பணம் திரும்ப செலுத்தப்படும்.

​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு வருந்துகிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.