தஞ்சாவூர்: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 18 நாள்கள் வெகு விமர்சையாக நநடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு சித்திரை விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
முன்னதாக, பஞ்சமூா்த்திகளுடன் சந்திரசேகரா் கோயிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா், கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டுது.
பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த துணிகளை கொண்டு பிரமாண்ட கொடிமரத்தில் மங்கல வாத்தியம் முழங்க நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
தொடா்ந்து, நாள்தோறும் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.
18 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரெங்கா ரெங்கா கோஷத்துடன் அரங்கநாதர் தேரோட்டம்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




