விஜய் சேதுபதியின் மகாராஜா: வெளியீடு எப்போது?

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் மகாராஜா: வெளியீடு எப்போது?

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, 'ஜவான்' உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியின் 50வது படமாக 'மகாராஜா' திரைப்படம் உருவாகி உள்ளது.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

விஜய் சேதுபதியின் மகாராஜா: வெளியீடு எப்போது?
வரலட்சுமி சரத்குமாரின் சபரி: வெளியீட்டுத் தேதி!

பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் மே 16 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com