தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.54,440 ஆக விற்பனையான நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்தது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.54,440 ஆக விற்பனையான நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்தது.

தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் முதல் புதிய வரலாறு படைத்து வருகிறது. வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை புதிய உச்சமாக பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை சனிக்கிழமை (ஏப்.13) பவுனுக்கு 200 குறைந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது
கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கிய இளம் தலைவர் ராகுல் காந்தி!

அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,780-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,240-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.89,000-க்கும் விற்பனையாகிறது.

பணவீக்கம், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை கண்டுவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com