சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜராக உத்தரவு!

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2024, 6:31 pm IST

தனுஷ்-ஐஸ்வா்யா திருமணம் 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.

சுமாா் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னா், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

2022-ஆம் ஆண்டு இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். தனுஷ் மற்றும் ஜஸ்வா்யா இடையே உள்ள பிரச்னையை தீா்க்க அவா்களுடைய குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் ஈடுபட்டனா். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரினர்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று(ஏப். 15) நடைபெற்ற நிலையில், வரும் அக். 7 ஆம் தேதி நேரில் ஆஜராக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.