நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த  பின் நிர்மலா சீதாராமன்!

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கா்நாடகத்தில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் வெள்ளிக்கிழமை (ஏப். 26) வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 28 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தாய் மாமாவுடன் வந்து பெங்களூருவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த  பின் நிர்மலா சீதாராமன்!
வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

ின்னர் செய்தியாளர்களுடன் பேசிய நிர்மலா சீதாராமன், “ அதிகப்படியான மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். மக்கள் நிலையான ஆட்சி அமைய விரும்புகிறார்கள், அவர்கள் சிறந்த கொள்கைகள், வளர்ச்சி, முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.

அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com