தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்ப அளவு ஞாயிற்றுக்கிழமை பதிவானது. உதகையில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதை விட இன்று 84.2 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. மேலும், திருப்பத்தூா்-106.52, தருமபுரி-106.16, வேலூர், திருத்தணி-105.98, பரமத்திவேலூர் -104.36, சேலம் - 104.18, மதுரை விமான நிலையம் -103.28,மதுரை நகரம் -102.92, கோவை -102.56, திருச்சி-102.38, நாமக்கல்-102.2, மீனம்பாக்கம் -101.48, தஞ்சாவூா்-100.4 டிகிரி என மொத்தம் 14 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
ஏப்.30 வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 2 டிகிரி செல்சியஸ் படிப்படியாக அதிகரிக்கும். மேலும், வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு மேல் வெயில் சுட்டெரித்துள்ளது.
உதகையில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதை விட ஞாயிற்றுக்கிழமை 84.2 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
கடந்த 1951 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை பதிவான வெப்ப நிலையில் இன்றுதான் மிகவும் அதிக வெப்பமான நாளை சந்தித்திருக்கிறது உதகை.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் வானம் ஓரளவு காற்றுடன் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் மழையுடன் கூடிய கடும் வெப்பம்: வழக்கத்திற்கு மாறான ஏப்ரல் வானிலை

14 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

11 இடங்களில் வெயில் சதம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு



