வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 282-ஆக உயர்வு
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.


வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளம் மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது.
700-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம், புதன்கிழமை வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த 179 பேரையும், 4 உடல்களையும் மீட்டனர்.
அட்டமலை, முண்டக்காய் மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் தேடும் பணிகள் வியாழக்கிழமை காலை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேடுதல் குழுவில் ஒரு நாய் படையும் இணைக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றும் பணியில் ஐந்து ஜேசிபிகள் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வயநாட்டில் உள்ள சூரல்மலையில் ஆற்றின் கிளை நதியின் குறுக்கே தற்காலிக பாலம் கட்டும் பணியை ஆயுதப்படையினர் வியாழக்கிழமை காலை மீண்டும் தொடங்கினர்.
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட முண்டக்காய் மற்றும் அட்டமலை பகுதிகளுக்கு ஆட்கள் மற்றும் கனரக இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு இந்த பாலம் முக்கியமானது. வியாழக்கிழமை பிற்பகல் அல்லது அதற்கு முன்னதாகவே பாலம் கட்டுமான பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்புக் குழுவினர் நாய்க் குழுவின் உதவியுடன் உயிருக்கு போராடுபவர்களையும், இறந்தவர்களையும் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள், மண் மற்றும் பாறைகளின் அடர்ந்த அடுக்குகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் போன்றவை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக மாறியுள்ளன.
தற்காலிக பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதிகமான ஆட்கள் மற்றும் இயந்திரங்களின் வருகையுடன் குப்பைகளை அகற்றும் பணி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிளை ஆறுகள் மற்றும் அதை ஒட்டிய வனப்பகுதிகளில் உடல்களை தேடவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சாலியாரில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் உறவினர்களால் அடையாளம் காண வயநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
வயநாட்டிற்கு வாகனங்கள் அனுமதியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, அவசர தேவைக்கான வாகனங்களுக்கான மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மற்றும் பலர் காயம் அடைந்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கேரளம் வந்துள்ளனர்.
தில்லியில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையம் வந்த இருவரும் அங்கிருந்து கார் மூலம் வயநாடு சென்றுள்ளனர்.
நிலச்சரிவால் கேரளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இருவரும் பார்வையிட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...