நடிகர் விஜய்யின் கோட் படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
செப்.5 ஆம் தேதி கோட் படம் வெளியாக உள்ளதால், இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இப்படத்தின் டிரைலர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கோட் படத்தின் டிரைலர் ஆக. 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளிதாஸ் - 2 டிரைலர் வெளியானது!

7,500mAh பேட்டரியுடன் மார்ச் 24-ல் வெளியாகும் ஒன்பிளஸ் 15 டி!

வெளியானது 3.26 நிமிட துரந்தர் 2 படத்தின் டிரைலர்!

காந்தி டாக்ஸ் ஓடிடி தேதி!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


