ரஷியா: சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு!

ரஷியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு இயற்கை சீற்றங்கள்
earth quake
நிலநடுக்கம் (கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

ரஷியாவின் கிழக்கு கம்சாட்கா கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 90 கி.மீ. தொலைவில், பூமிக்கு 50 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலடுக்கத்தால் எந்தவித பொருள்சேதமோ, உயிர்ச்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றும், இருப்பினும் கட்டடங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

மேலும், நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் என்ற எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

earth quake
சொல்லப் போனால்... பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி?

ரஷியாவின் கம்சட்காவில் சுமார் 181,000 மக்கள் வசிக்கும் கடற்கரை நகரத்தில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 450 கி.மீ. தொலைவில் ஷிவெலுச் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை வெடித்து சிதறியுள்ளது.

ரஷியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கத்தால் கம்சாட்கா மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com