ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்ததில் 7 பேர் பலியாகினர். மேலும், 30 பேர் காயமடைந்துள்ளனர்.
அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள எசியன்டியா(Escientia) மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
மதிய உணவு இடைவேளையில் பெரும்பாலான தொழிலாளர்கள் உணவருந்த சென்று இருந்தபோது, வெடி விபத்து ஏற்பட்டதால், பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.