2026-க்குப் பிறகு அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்: டிடிவி.தினகரன்

2026 பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிக்கும் சசிகலாவின் சுற்றுப்பயணம் பழனிசாமி இருக்கும் வரை எடுப்படாது
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர்: 2026 பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிக்கும் சசிகலாவின் சுற்றுப்பயணம் பழனிசாமி இருக்கும் வரை எடுப்படாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு, யார் கட்சி ஆரம்பித்தாலும் பயமில்லை. இன்னொருத்தர் கட்சி ஆரம்பித்ததை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் தான் யார் தேவை - தேவை இல்லை என்று தீர்மானிப்பவர்கள்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.
2 காசோலைகளை தனுஷுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா போன்ற போதைப்பொருள் கலாசாரம் தான் முக்கிய காரணமாக உள்ளது. மாணவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. வருங்கால சமுதாயத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் வருங்கால சமுதாயத்தை நல்ல ஒரு சமுதாயமாக உருவாக்க முடியும் என்றார்.

அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிக்கும் சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்து கேட்டதற்கு, அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என எல்லோரும் முயற்சி மேற்கொள்வது இயற்கை. இதற்கு பழனிசாமி தடையாக இருக்கும் வரை அந்த முயற்சி பலிக்காது.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மரணம்! விபத்தில் தந்தையும் பலி!

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான சிறந்த கூட்டணியாக உள்ளது. மக்கள் விரோத திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். உறுதியாக அதில் வெற்றி பெறுவோம்.

அதிமுகவில் இரட்டை இலை சின்னம் இருப்பதால் தொண்டர்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். பழனிசாமியின் தவறான நடவடிக்கையையும், சுயநலத்தை புரிந்து கொண்டு அதற்கு தகுந்த முடிவை எடுப்பார்கள் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால் 2026-க்குப் பிறகு அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

திமுக தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள எது வேண்டுமாலும் செய்வார்கள். அதைக் கேட்டால் ராஜதந்திரம் என்று கூறுவார்கள். பிஜேபி அரசியல் ரீதியாக திமுகவிடம் இணக்கம் காட்டவில்லை. மத்திய அரசிடம் போய் திமுக தாஜா செய்து குனிந்து - வளைந்து நிற்பதால் அவர்கள் வருகிறார்கள். அரசியல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அமமுக யாரை நம்பியும் தொடங்கவில்லை என டிடிவி.தினகரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com