அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பால்கனி இடிந்து விழுந்து நொறுங்கிய ஆட்டோ!

சென்னை பெரம்பூரில் 70 ஆண்டு பழமையான வீட்டின் முதல் மாடி பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆட்டோ மீது சுவர்கள் விழுந்ததால் ஆட்டோ நொறுகியது.

News image
சென்னை பெரம்பூரில் வீட்டின் முதல் மாடி பால்கனி இடிந்து விழுந்ததில் நொறுங்கிய ஆட்டோ
Updated On :4 டிசம்பர் 2024, 5:28 am

DIN

சென்னை: சென்னை பெரம்பூரில் 70 ஆண்டு பழமையான வீட்டின் முதல் மாடி பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆட்டோ மீது சுவர்கள் விழுந்ததால் ஆட்டோ நொறுகியது.

சென்னை பெரம்பூர் தீட்டித் தோட்டம் 7 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாபு மன்சூர். முதல் தளத்துடன் கூடிய இவருக்குச் சொந்தமான 70 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது. இந்த வீட்டில் தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை மாலை திடீரென வீட்டின் முதல் தளத்தின் பால்கனி திடீரென பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது சுவர்கள் விழுந்ததால் ஆட்டோ அப்பளம் போல் நொறுகியது.

பின்னர், தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

போலீசார் பழமை வாய்ந்த கட்டடத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வீட்டில் உரிமையாளருக்கு தெரிவித்ததுடன், சேதமடைந்த ஆட்டோவை பழுது பார்க்க கூறி சமரசம் பேச்சு வார்த்தைக்கு பிறகு வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவரும் உடன்பட்டனர்.

பால்கனி இடிந்து விழுந்தது மாலை நேரமாக இருந்தாலும், அந்த பகுதியில் யாரும் இல்லாததாலும் அதிா்ஷ்டவசமாக உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.