அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பில் 5 பேர் பலி!

நெதர்லாந்து நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பில் 5 பேர் பலியானதைப் பற்றி..
வெடிப்பு நிகழ்ந்த குடியிருப்பு பகுதியில் மீட்பு பணிகள் நடைப்பெற்று வரும் காட்சி.
வெடிப்பு நிகழ்ந்த குடியிருப்பு பகுதியில் மீட்பு பணிகள் நடைப்பெற்று வரும் காட்சி.
Published on
Updated on
1 min read

நெதர்லாந்து: டென் ஹாக் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பில் 5 பேர் பலியானார்கள். வெடிப்பினால் அந்த குடியிருப்பின் பாதிக் கட்டடம் சரிந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது.

சனிக்கிழமை அதிகாலை 6.15 மணியளவில் டென் ஹாக் நகரத்திலுள்ள மூன்றடுக்கு குடியிருப்பினுள் பயங்கர சத்ததுடன் இந்த வெடிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பரவிய தீயினால் அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் பெரும்பகுதி சரிந்தது. தீயைக்கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதுடன், மீட்புப்படையினர் குவிக்கப்பட்டு இடிப்பாடுகளினுள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி துவங்கியது.

இதனைத்தொடர்ந்து, நேற்றுவரை பலியானவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்த 5வது நபரின் உடலும் மீட்கப்பட்டது. மேலும், படுகாயமடைந்திருந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாவது நாளான இன்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதுகுறித்து மீட்புப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெடிப்பு நிகழ்ந்த கட்டடத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்துவந்த நிலையில் இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல் தெரியவில்லை என்றும் இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெடிப்பு ஏற்பட்ட பகுதியைச் சுற்றியிருந்த சுமார் 40 குடும்பங்களைச் சார்ந்த மற்ற குடியிருப்புவாசிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இடமாற்றப்பட்டு வேறிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்ஸிமா ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து தங்களது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்தில் வெடித்தது என்ன? அது எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. வெடிப்பு ஏற்பட்ட சமயத்தில் அப்பகுதியில் ஒரு கார் அதிவேகமாக கடந்து சென்றதுள்ளதாகவும், இதுகுறித்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com