
மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’ செவ்வாய்க்கிழமை (டிச.17) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்று கொறடா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’ செவ்வாய்க்கிழமை (டிச.17) தாக்கல் செய்யப்படுகிறது. தொடா்ந்து, அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை காங்கிரஸ் எதிர்க்க திட்டமிட்டுள்ளது.
மக்களவை அலுவல் பட்டியலின்படி, இந்த மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று செவ்வாய்க்கிழமைக்கான அலுவல் பட்டியலில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.