6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய கமல்ஹாசன்: நடிகர் சிவகார்த்திகேயன்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:35 pm

DIN

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு, அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலைத்துறை மற்றும் ஊடகங்களில் (பத்திரிக்கை, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் இணைய ஊடகம்) இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி.

“அமரன்” டீசர் மூலம் இந்த நாளை மேலும் மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன், டிஸ்னி மற்றும் "அமரன்" படக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அதே நாளில், எங்கள் "சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்" தயாரிப்பில் உருவான “கொட்டுக்காளி” திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பாராட்டுகளை பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் “SK 23” படக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அன்பான ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவு கடந்த அன்பு தான், என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.