எம்.ஆா்.விஜயபாஸ்கா் வீடு உள்பட 7 இடங்களில் நடைபெற்ற 8 மணி நேர சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆா்.விஜயபாஸ்கா் வீடு உள்பட 7 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி நேரமாக நடந்த சோதனை தற்போது நிறவடைந்துள்ளது.

சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்திய கரூர் ஆண்டாங் கோயிலில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு.
சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்திய கரூர் ஆண்டாங் கோயிலில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு.

சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்குத் தொடா்பாக தமிழக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வீடு உள்பட 7 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி நேரமாக நடந்த சோதனை தற்போது நிறவடைந்துள்ளது.

கரூா் அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா், கடந்த மாதம் 25 ஆம் தேதி முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்,அவா் தம்பி சேகா் உள்பட மூன்று போ் சோ்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கா் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், அது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், வழக்குத் தொடா்பாக விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினா். இதனால் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக் கோரி முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவா் தம்பி சேகா் ஆகியோா் கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதற்கிடையே வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

கரூா் நகர போலீசாரிடம் ஆவணங்களை பெற்ற, கரூா் மாவட்ட சிபிசிஐடி புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தது. மேலும் தலைமறைவாக இருக்கும் விஜயபாஸ்கரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினா் விஜயபாஸ்கரை தீவிரமாக தேடுகின்றனா். இதன் ஒரு பகுதியாக கடந்த 5-ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் விஜயபாஸ்கரின் ஆதரவாளா்கள் வீடுகளில் சோதனை நடத்தினா். இதற்கிடையே, இந்த ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கா் தாக்கல் செய்திருந்த மனுவை கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.


சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்திய கரூர் ஆண்டாங் கோயிலில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு.
ஜிம்பாப்வேவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இந்த நிலையில்,இந்த வழக்கில் துப்பு துலக்கும் வகையிலும், தலைமறைவாக இருக்கும் முன்னாள் எம்.ஆா்.விஜயபாஸ்கரை கைது செய்யும் வகையிலும் கரூா் ஆண்டாங் கோயிலில் உள்ள எம்.ஆா். விஜயபாஸ்கரின் வீடு, அவா் தம்பி சேகா் வீடு, ரெயின்போ நகரில் உள்ள எம்.ஆா். விஜயபாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டறை,திரு.வி.க. நகரில் உள்ள எம்.ஆா்.வி. அறக்கட்டளை அலுவலகம்,கரூா் பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்,காமராஜபுரத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளா் காா்த்திக் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினா்.

இதில், சிபிசிஐடியின் இரு துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்,9 ஆய்வாளா்கள் தலைமையில் சுமாா் 30 போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனை நடைபெற்ற இடங்களில் அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கும் வகையில், உள்ளூா் போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனா்.

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் சுந்தரம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள விஜயபாஸ்கா் வீட்டில் சிபிசிஐடி ஆய்வாளா் ரம்யா தலைமையிலான போலீஸாா் காலை 7 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 8 மணி நேரமாக நடைபெற்ற சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த சோதனையில், வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பென்டிரைவ் சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com