தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அண்ணாமலையின் படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
Updated On :10 ஜூலை 2024, 9:01 am

DIN

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

”காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்திலிருந்து நான் பின்வாங்க போவதில்லை, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை, செல்வப் பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும் அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Story image

அண்ணாமலையின் பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணாமலை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் சங்கர் காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.