பணிப்புறக்கணிப்பு செய்த நீடாமங்கலம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள்.
பணிப்புறக்கணிப்பு செய்த நீடாமங்கலம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள்.

நீடாமங்கலம் பேரூராட்சியில் பணிகளை புறக்கணித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நீடாமங்கலம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் புதன்கிழமை பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் புதன்கிழமை பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீடாமங்கலம் பேரூராட்சியில் சுமார் 30 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் ஒருவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திலும், மற்றொருவர் நீடாமங்கலத்தில் வரி வசூல் பணியிலும் இருந்து வருகின்றனர்.

வரிவசூல் பணி முடிந்த பின்பு சம்மந்தப்பட்ட தூய்மைப் பணியாளர், தூய்மைப் பணிக்கு வரவேண்டும் எனக்கோரி மற்ற தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பேரூராட்சி நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால் சம்மந்தப்பட்ட தூய்மைப் பணியாளர் தூய்மைப் பணிக்கு வருவதில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மற்ற தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் புதன்கிழமை அதிகாலை பேரூராட்சி அலுவலகம் வந்த போதும் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பணிப்புறக்கணிப்பு செய்த நீடாமங்கலம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள்.
கைப்பேசியில் பேசும்போதே தொடா்பு துண்டிப்பு: கால் டிராப்’ பிரச்னையால் 85% போ் பாதிப்பு

பலரும் சமாதனம் செய்ய முயன்றபோதிலும் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து தங்கள் தெருவுக்குச் சென்று வீடுகளின் முன்பு அமர்ந்து கொண்டனர். இதனால் நீடாமங்கலம் பேரூராட்சியில் சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது.

ஏற்கனவே கொசு,ஈ தொல்லைகாளால் மக்கள் அவதிப்படும் நிலையில் தூய்மைப் பணிகள் நடைபெறாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com