நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடலை ஆய்வு செய்தார்.
சேலம் தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மாநாட்டை நடத்துவதற்காக திடலை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்டத் தலைவர் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
இந்த முதல் மாநில மாநாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், மாநாட்டை நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்து வரும் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.