விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

தபால் வாக்குகளை முதலில் எண்ணி உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும்: ‘இந்தியா’ கூட்டணி வேண்டுகோள்

தபால் வாக்குகளை முதலில் எண்ணி உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையர்களிடம் ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்கள் வலியுறுத்தினா்.

News image

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இந்திய தேர்தல் ஆணையர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள்

Updated On :2 ஜூன் 2024, 8:09 pm IST

புதுதில்லி: தபால் வாக்குகளை முதலில் எண்ணி உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தில்லியில் தேர்தல் ஆணையர்களிடம் ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா்.

நடந்து முடிந்த மக்களவைத்தோ்தலின் வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறவுள்ள நிலையில்,

தில்லியில் தேர்தல் ஆணையர்களை ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, டி.ஆர்.பாலு, சீதாரம் யெச்சூரி, டி.ராஜா. நாசீர் ஹுசைன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது, வாக்கு எண்ணிக்கை நாளன்று விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.