விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெற்றி பெறும் இளவயது வேட்பாளர், மூத்த வேட்பாளர்- யார் தெரியுமா?

மக்களவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 11 வேட்பாளர்களும், 25-30 வயதுக்குள்பட்ட 537 பேரும் போட்டியிட்டனர்.

News image

டி.ஆர்.பாலு, புஷ்பேந்திர சரோஜ், பிரியா சரோஜ்

Updated On :4 ஜூன் 2024, 3:00 pm

DIN

மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 25 வயதான இளம் வயது வேட்பாளர்கள் புஷ்பேந்திர சரோஜ், பிரியா சரோஜ் மற்றும் அதிக வயது வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த 82 வயதான டி.ஆர்.பாலு ஆகியோர் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

80 வயதுக்கு மேற்பட்ட 11 வேட்பாளர்களும், 25-30 வயதுக்குள்பட்ட 537 பேரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டனர்.

உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி தொகுதியில் போட்டியிட்ட புஷ்பேந்திர சரோஜ் 103944 வாக்குகள் வித்தியாசத்திலும், மச்லிஷாஹர் தொகுதியில் போட்டியிட்ட ப்ரியா சரோஜ் 35850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். இருவரும் 25 வயதில் மக்களவையின் இளைய உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளனர்.

திமுகவில் இருந்து 6 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலு (82), மக்களவையின் மூத்த உறுப்பினராக மீண்டும் பதவியேற்க உள்ளார். அவர் போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 4,68,523 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள அவர் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.