பக்ரீத் பண்டிகை: நங்கவள்ளி சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
பக்ரீத் பண்டிகை: நங்கவள்ளி சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Published on
Updated on
1 min read

சேலம்: மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் ஞாயிற்றுகிழமை தோறும் ஆடு, மாடுகள் விற்பனை செய்யபடுகிறது.

இந்த நிலையில், நாளை (ஜூன் 17)பக்ரீத் பண்டிகை என்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும் விற்கவும் இன்று(ஜூன் 16)நங்கவள்ளி சந்தைக்கு மக்கள் வருகை தந்தனர்.

இன்று காலை 6 மணிக்கு கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

பக்ரீத் பண்டிகை: நங்கவள்ளி சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
பக்ரீத் பண்டிகை: ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட ஆட்டு கிடாய் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

நாளை பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.

மேலும், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சந்தை துவங்கிய இரண்டு மணி நேரத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com