ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து!
எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து.


மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி எம்.பி. தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
‘காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் போட்டியின்றி ஒருமனதாக எதிா்க்கட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற மனமாா்ந்த வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளாா்.
ராகுல் காந்தி நன்றி: விஜய் வாழ்த்து தெரிவித்ததைத் தொடா்ந்து எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.
தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஒவ்வொரு இந்தியரின் குரல் ஒலிக்கும்போது நம்முடைய ஜனநாயகம் வலுவடைகிறது. இது நம்முடைய இலக்கு மற்றும் கடமை’ எனப் பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...