பணிப்பெண்ணுக்கு கொடுமை: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன்!
பணிப்பெண்ணை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மொ்லினா ஆகியோரை சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆந்திர மாநிலத்தில் கைது செய்தனா்.
இருவரும் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இதனிடையே, இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
ஜாமீன் மனு மீதான இன்றைய விசாரணையில், இதுவரை 16 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், முறையான விசாரணை மேற்கொண்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2 வாரங்களுக்கு நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...